தமிழ் நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் எல். இளையபெருமாளின் 21-வது ஆண்டுநினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி,
சிதம்பரம் புறவழிச்சாலை யில் அமைந்துள்ள அவரது நூற்றாண்டு நினை வரங்கத்தில் உள்ள திரு வுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலை வரும், நந்தனார் கல்விக் கழகத் தலைவருமான கே.ஐ. மணிரத்தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் கே.ஐ. மணிரத்தினம் தெரிவித்தது: மறைந்த எல்.இளையபெருமாளின் சமூகப் பணி களையும், அரும்பணிகளையும் போற்றும் வகையில் அமைக் கப்பட்ட நூற்றாண்டு நினைவரங்கம் திறக்கப்பட்டு ஓராண் டுக்கும் மேலாகியும் இதுவரை பொதுமக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படவில்லை.
எனவே, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பயனளிக் கும் வகையில் நினைவரங்கத்தை உடனடியாக பயன்பாட் டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மற் றும் நந்தனார் கல்விக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Read Time:1 Minute, 36 Second