0 0
Read Time:3 Minute, 6 Second

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையொரம் இருந்த சாலைகள் வீடுகள் வாகனம் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இது வரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து சுற்றுலா மற்றும் யாத்திரை சென்றவர்களில் சிலர் மீட்கப்பட்ட நிலையில் பலரும் காணாமல் போய் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கும்பகோணத்தில் இருந்து சென்ற 54 பேரில் 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் மேலும் 34 பேரின் தகவல் குறித்து தெரியவில்லை என்றும் மேலும் சென்னையில் இருந்து சென்ற மற்றொரு 49 பேர் கொண்ட குழு விவரங்களையும் சேகரித்து வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, தமிழர்களின் நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி ஆத்திய அரசை வலியுறுத்துவது, அவர்களை பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *