விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி – மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது – மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது – காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது – கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது,
இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் ஷூட்டிங் மாடல் தவெக அரசைக் கண்டித்து,
கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட்-3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.
தஞ்சையில் கூடுவோம் – விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.