கோவையில் நடைபெற்ற சுகி சர்வதேச கராத்தே போட்டியில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
சுகி சர்வதேச கராத்தே போட்டி – 2025, கோவை பி எஸ் ஜி கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்டு 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 1000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் தீக்சன், தர்ஷன்,சாய் ரக்சன்,தியா லட்சுமி ஆகியோர் இந்திய அணி சார்பாக பங்கேற்றனர்.
இதில் தீக்சன் கட்டா பிரிவில் ஒரு தங்கம், குமிட்டே பிரிவில் ஒரு வெண்கலம் மற்றும் தர்ஷன் கட்டா பிரிவில் ஒரு வெள்ளி என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களையும் இந்தோனேசியா பயிற்சியாளர் ரிக்கி பர்ணபாஸ், தாய்லாந்து பயிற்சியாளர் நலின்பட், ஓமன் பயிற்சியாளர் பயஸ் காமிஸ், மலேசிய பயிற்சியாளர் அனந்தன் மற்றும் இந்திய பயிற்சியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்தினார்.