மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சாரணிய ஆசிரியை இரா.கோ.கலைமதி. இவர் மயிலாடுதுறை மாவட்ட சாரணிய பயிற்சி ஆணையர் ஆவார். இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள சாரண சாரணியர் தேசிய தலைமையகத்தில் நடைபெற்ற ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கும் சாரண சாரணியர் இயக்கத்தின் மிக உயரிய பயிற்சியான லீடர் ட்ரைனர் பயிற்சியினை தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து இப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள முதல் பெண் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். இன்று மாநில தலைமையகத்தில் நடைபெற்ற 79 – வது சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஆசிரியை இரா.கோ.கலைமதி அவர்களை தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர்,பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.