மரக்காணம் அடுத்த, வேப்பேரி அரசு பள்ளியில் பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களை துடைப்பத்தால் தாக்கும் கொடுமை.
தமிழகத்தில் சில மாதங்களாக பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வகுப்பறையில் அடாவடித்தனத்தை ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐந்து மாணவர்கள் ஒன்றாக சேர்த்து ஒரு ஆசிரியரை கேலி செய்வதும், மேலும் ஒரு மாணவன் கஞ்சா போதையில் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தற்போது பேசுபொருள் ஆகி வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களை துடைப்பத்தால் தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் குறித்து ஆசிரியர்கள் வட்டாரத்தில் கூறுகையில், மாணவர்களை கண்டித்தால் பள்ளிமாணவர்கள் அடியாட்களுடன் வந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை மிரட்டுவதாகவும், காலையில் வருகை பதிவேடு கொடுத்துவிட்டு பள்ளியின் சுற்றுச் சுவரை தாண்டி சென்று மது பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகி உள்ளதாக ஆசிரியர்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.