0 0
Read Time:1 Minute, 21 Second

ஜப்பான் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டு தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதோடு வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்து இருந்த நிலையில் இந்த ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தடகள பிரிவிற்கு தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக வீரர்கள் தேர்வாகி உள்ளனர். தனலெட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு தலா 5 லட்சம் ஊக்கதொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %