0 0
Read Time:2 Minute, 30 Second

கேரளாவில் பெரும் புயலை கிளப்பியுள்ள கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை வழக்கில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாஜகவின் நடிகர் சுரேஷ் கோபியிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது என தகவல்.

BJP's Actor-politician Candidate Suresh Gopi Violated Model Code: Kerala  Election Chief

கேரளா சட்டசபை தேர்தலின் போது ஏப்ரல் 3-ந் தேதியன்று கொடக்கர என்ற இடத்தில் வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ3.5 கோடி கறுப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டது.

இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளா சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணயில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ 1.25 கோடி பணம் மீட்கப்பட்டது. இக்கொள்ளை தொடர்பாக தர்மராஜன் உள்ளிட்ட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொள்ளை கும்பலுக்கு உதவியதாக பாஜக, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் போலீசார் விசாரணையில் சிக்கி உள்ளனர்.

I believe in development: Suresh Gopi

இதனிடையே பாஜகவின் திரிசூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியிடமும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். திரிசூர் தொகுதியில் பாஜகவின் தேர்தல் செலவுக்காகவே இந்த பணம் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பணம் யாரால் அனுப்பி வைக்கப்பட்டது? பணம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக சுரேஷ் கோபியிடம் விசாரிக்கப்பட உள்ளது. சுரேஷ் கோபியிடம் பதிவு செய்யப்படும் வாக்குமூலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் கேரளா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %