கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி மன்றம் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நான்காண்டுகள் நிறைவவடைந்ததை பாராட்டி சிறப்புத்தீர்மானம்.
கடலூர் மாவட்டம் , கிள்ளை பேரூராட்சி மன்றத்தின் சாதாரணகூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா முத்துக்குமார் தலைமையில் இன்று கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒன்றிய அரசு மாநில அரசுக்கான நிதியை ஒதுக்காவிட்டாலும் எவ்வித இடர்பாடுகளையும் தவிர்த்து மாநில அரசின் நிதியை வைத்து மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சலுகைகளையும் செய்து அதில் முக்கியமாக காலை உணவுத்திட்டம், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தந்து சாதனை நாயகராக இந்தியாவிற்கே எடுக்காட்டாக விளங்கும் திராவிட மாடல் முதலமைச்சர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கிள்ளை பேரூராட்சி மன்றம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் பாஸ்கரன் அவர்கள் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் கிள்ளை பேரூராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மாதாந்திர செலவு சீட்டு கணக்கு வழக்குகளை பேரூராட்சி எழுத்தர் செல்வராஜ் வாசித்தார்.கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட 15 – வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி