சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ”ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறேன். விரைவில் மதுரை மண்ணில் நம் கட்சி சார்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்களை(மதுரை மக்கள்) சந்தித்து பேசுகிறேன். இன்றைக்கு ஒரு 1 மணி நேரத்தில் நாங்கள் லேண்ட் ஆகி உங்கள் அனைவரையும் பார்த்து விட்டு நான் என் வேலையை பார்க்க போகிறேன். நீங்களும் பாதுகாப்பாக உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்.
யாரும் என்னுடைய வேனுக்கு பின்னாடியோ காருக்கு பின்னாடியோ பின் தொடர வேண்டாம் . பைக்கில் வேகமாக வருகிறது, நின்றுகொண்டு இயக்குவது, தலைக்கவசம் அணியால் இருப்பது, இதுபோல வராதீர்கள். ஏன்றென்றால் அந்த காட்சிகளை பார்ப்பதற்கு மனதிற்கு பதற்றமாக இருக்கிறது. லல் யூ ஆல்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.