Read Time:1 Minute, 11 Second
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
முந்தைய நாள் ஸ்கோருடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் வேகமாக வெளியேற முதல் இன்னிங்சில் அந்த அணி 132 புள்ளி 2 ஓவர்களில் 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா 59 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார். 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தபோது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. கோலி 45 ரன்களுடனும், புஜாரா 91 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.