Read Time:1 Minute, 16 Second
வெள்ளி, சனி, ஞாயிறில் வழிபாட்டுத்தலத்தில் பக்தர்கள் தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால் அதில் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், இன்று மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். பள்ளிகள் திறந்து ஒருவாரம் கழித்து கரோனா குறைந்திருந்தால் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.