0 0
Read Time:1 Minute, 18 Second

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் 32-வது ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது.

205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளுடன் கடந்த மாதம் 23-ஆம் தேதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதி நாளான இன்று 13 பதக்கங்களுக்கான விளையாட்டுகள் நடைபெறுகிறது. போட்டிகள் முடிந்ததும், கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவுவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவு விழா அணிவகுப்பில் கலந்து கொள்ளும் இந்திய அணியை மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா தேசிய கொடியை சுமந்து சென்று வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு விழா இறுதியில் 2024-ஆம் ஆன்டு ஒலிம்பிக்கை நடத்தும் பிரான்சிடம் முறைப்படி ஒலிம்பிக் ஜோதி ஒப்படைக்கப்படும்.   

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %