Read Time:1 Minute, 14 Second
இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
ஜார்கண்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணா, இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிபதிகள் புகார் அளித்தால் காவல்துறையோ, சிபிஐ அமைப்போ உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில், சிபிஐ, உளவுத்துறை அமைப்புகள் நீதித்துறையின் விசாரணைக்கு உதவ மறுப்பதாகவும் குற்றசாட்டியுள்ளார். மேலும், புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை என்றும் கருத்தை முன் வைத்துள்ளார்.