Read Time:1 Minute, 23 Second
கடலூரில் சாராயம் குடித்ததாக பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர், கிரிக்கெட் விளையாடிவிட்டு கரும்பு தோட்டம் வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, கரும்பு தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டு 3 பேரும் சாராயம் குடித்ததாக கூறப்படுகிறது.சாரயத்தை குடித்து விட்டு வீட்டுக்குச் சென்ற 3 பேரும் மயங்கி விழுந்த நிலையில், பெற்றோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மாணவர்களின் உடல்நிலை மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்கு ஜிப்மர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.