0 0
Read Time:3 Minute, 17 Second

சென்னை விமான நிலைய கழிவறையில், குப்பைத் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த, ரூ.90 லட்சம் மதிப்புடைய 1.250 கிலோ தங்க கட்டிகளை, விமான நிலைய தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்து, சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், உள்ள கழிவறையை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தனர். அப்போது கழிவறையில் இருந்த குப்பைத் தொட்டியில், பார்சல் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த ஒப்பந்த ஊழியர்கள் உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேலாளர், சென்னை விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, அந்த பார்சலில் வெடிகுண்டு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது.

பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பார்சலை பிரித்துப் பார்த்ததில், அதனுள் 4 தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பார்சலை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்கக் கட்டிகளை ஆய்வு செய்த பொழுது, அந்த 4 தங்கக்கட்டிகளின் மொத்த எடை ஒரு கிலோ, 250 கிராம் என்பதும், அதன் சர்வதேச மதிப்பு ரூ. 90 லட்சம் என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சென்னை விமான நிலையத்தில் உள்ள, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

துபாயிலிருந்து இன்று அதிகாலை வந்த விமானத்தில், இந்த தங்க கட்டிகள் கடத்திக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனவும் விமான நிலையத்தில் சுங்கச் சோதனை அதிகமாக இருந்ததால், கடத்தல் ஆசாமி, கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, அதன் பின்பு யார் மூலமாகவது அதை வெளியே எடுத்து வர, திட்டமிட்டு இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %