இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சிதம்பரம் கிளை சாா்பில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் 150 பேருக்கு முகக் கவசம், கிருமி நாசினி, சோப் அடங்கிய சுகாதாரப் பொருள்களும், ரொட்டி, ஹாா்லிக்ஸ், பழங்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சில் கடலூா் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்புத் தலைவா் பிறையோன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்தப் பொருள்களை சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனை தலைமை மருத்துவா் அசோக் பாஸ்கரிடம் வழங்கினாா் . நிகழ்ச்சியில் சிதம்பரம் ரெட் கிராஸ் தலைவா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல்சந்த் கோத்தாரி, தீபக்குமாா் ஜெயின், லலித் மேத்தா ஜெயின், தன்னாா்வலா்கள் சுரேஷ், ராம்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.