Read Time:1 Minute, 17 Second
மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக எஸ்.பி ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார் விழுப்புரம், பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ; இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.மேலும் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் செயல்களில் ஈடுபாட்டால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அய்யா நீங்கள்.. சொன்னது மிகவும் தவறு யாரும் விரும்பி படியில் தொங்க வில்லை காலை 8மணி முதல் 9 மணி வரை 5 வயது முதல் 70 வயது வரை பயணம் செய்வதால் கூட்டம் அதிகமாகிறது.. ஒவ்வொரு வருடமும் மக்கள் தொகை அதிகம் ஆகி கொண்டு தான் இருக்கிறது ஆனால் பேருந்து எண்ணிக்கை அதிகமாகவில்லை… ஆகவே பேருந்து எண்ணிக்கை அதிகம் படுத்தி பாருங்கள் அது மட்டுமல்ல மாநகர பேருந்துகளில் கதவு உள்ளது. ஆனால் நகர பேருந்தில் கதவு கிடையாது .பேருந்து கூட சரியான முறையில் இல்லை. இதற்கு தீர்வு காணுங்கள் 🙏🙏