கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் காவிரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட்ட சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமராட்சி ஊராட்சி ஒன்றியம் பெராம்பட்டு, திட்டுக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், கழக வழிகாட்டுக்குழு உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி.சண்முகம் பார்வையிட்டார்.
உடன் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.அருண்மொழிதேவன், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏபாண்டியன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.எஸ்.அருள், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி