Read Time:1 Minute, 14 Second
இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா?இல்லையா? நீட் இருப்பின் மாணவர்கள் தயாராக வேண்டுமா?வேண்டாமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி!
2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில், திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து இடங்களிலும் பேசும்போது, நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது.
நான் நடந்து முடிந்த சட்டப்பேரவையில்,நேரடியாக இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா?இல்லையா? நீட் இருப்பின் மாணவர்கள் தயாராக வேண்டுமா?வேண்டாமா? என கேட்டதற்கு மாண்புமிகு முதல்வர்
அவர்கள் இதற்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.