0 0
Read Time:1 Minute, 56 Second

நாடு முழுவதும் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய நீட் நுழைவுத் தேர்வு மாலை 5.20 மணியளவில் நிறைவடைந்தது.

இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இந்த தேர்வு இன்று (மே 5) பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் ஒன்றரை மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.சென்னையில் 36 மையங்களில் 24,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதி உள்ளனர். இதையடுத்து, மாலை 5.20 மணியளவில் நீட் தேர்வு முடிவடைந்தது.

பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு வினாத்தாள் எதிர்பார்த்த அளவுக்கு எளிதாக இல்லை என கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இயற்பியல் பாட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அதிகப்படியான கேள்விகள் NCERT பாடப்புத்தகங்களில் இருந்தே கேட்கப்பட்டு இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் ஜூன் 14 ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %