வார கவிதைகள்

69வது – வார இதழ் 

அடக்கமாயிரு!

அடக்கமெனும் பண்பு

அமரருள் பெற உதவும்! 

அடங்காமை  ஆரிருளில்

சேர்க்கும்.

உறுதிப்பொருளாம் 

அடக்கமே,

உயர்செல்வத்தைச்

சேர்க்கும்.

அறிய வேண்டுவனவற்றை

அறித்தால்,

செறிவறிந்த சிறப்பு கிட்டும்.

அடக்கமுடையார்

மலையினும்

மாணப்பெரிதோர் ஆவர்.

அடங்கி நடத்தல்

செல்வத்தினும் சிறந்த 

செல்வமெனச்,சொல்வர்

சான்றோர் 

ஐம்பொறிகளை 

ஆமை போல

அடக்கிட

எழுமையும்

ஏமாப்பு தரும்.

நாவினைக்

காத்திடல் ,நன்று! 

காத்திட மறந்தால்,

 வந்திடும் ஊறு!

தீயச்சொற்களைப்

பேசிட,செய்த அறங்கள்

யாவும் பயனின்றி போம்.

அழல் சுட்ட புண்,

தழும்பாகும் உடலில்.

நா சுட்ட புண்

தங்கும், வடுவாய் ,மனதில்!

சினம், காத்திட

அடக்கமாய் இருந்திடு!

உனை நாடி,

வருவார், அறக்கடவுள்

மகிழ்ந்து.

கவிஞர்- செ. கலைவாணி

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *