தினக்கவிதைக்கான தலைப்பு:
தினக்கவிதைக்கான தலைப்பு: | மகான் காந்தி மகான் |
கடைசி நாள்: | 02/10/2021 |
அனைவருக்கும் வணக்கம்…!
விதிமுறைகள்:
★கவிதை பிற மொழிக் கலப்பின்றி எழுத்துப் பிழையின்றி எழுதிடல் வேண்டும்
★முதல் மற்றும் இரண்டாம் வரிகளுக்கிடையில் இடைக்குறி(//) இடுவது மிகச்சிறந்தது. இது பொருள்மாறாமல் பதிவிட உகந்ததாக இருக்கும்.
★கவிதை அதிகபட்சமாக 30 வரிகளுக்குள் இருக்க வேண்டும். இல்லையெனில் நிராகரிக்கப்படும்.
★ நாளை (02/10/2021) காலை 10-மணிக்குள் மின்னஞ்சல் செய்யப்படும் கவிதைகள் மட்டும் இடம் பெறும்.
★ உங்கள் கவிதைகளை தட்டச்சு(Text) செய்து உங்களின் முழு பெயர் மற்றும் சரியான முகவரியுடன் மின் அஞ்சல் செய்யவும்.
★ கவி எழுதி விட்டு இரண்டு, மூன்று முறை உங்கள் கவியை வாசித்து எல்லாம் சரிபார்த்து பின் அனுப்புங்கள். பதிவிடுவதற்கு எளிதாகவும், ஏதுவாகவும் இருக்கும்.
★ எழுத்துக்களாக அனுப்பப்படும் கவிகள் மட்டுமே தற்போது காலம் கருதி பதிவிடப்படும்(PDF, IMAGE அல்ல)
★ படைப்பின் கீழ், அச்சிடப்படவேண்டிய உங்கள் பெயர் மற்றும் ஊரினை தெளிவாக குறிப்பிடுங்கள்.
★ பரிசு தேர்வு – தமிழ் நடை, உவமை, புதிய சொல்லாடல், கற்பனை என்ற பல காரணிகளின் அடிப்படையிலும், 4-5 புலம்வாய்ந்த கவிகளின் பரிந்துரைகளையும் கணக்கில் கொண்டே தேர்வு செய்யப்படும் (பரிசு நாளன்று மட்டுமே).
★மின் அஞ்சல்: [email protected]
நன்றி!
-அகர முதல இலக்கிய பேரவை