பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பெரியப்பட்டு, சிலம்பிமங்களம், வில்லியநல்லுார் ஊராட்சிகளில் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தனர் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர் வரவேற்றார்.
அ.தி.மு.க.,நிர்வாகிகளுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., உறுப்பினர் அட்டை வழங்கினார் விழாவில், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், தலைமைக்கழக பேச்சாளர் தில்லை கோபி, ஒன்றிய கவுன்சிலர்பாஸ்கர், ரவி, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கணேஷ், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, பேரூராட்சிகவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர், நிர்வாகிகள் செல்வராஜ், கோபிகிருஷ்ணன், சேட்டு, பாலகிருஷ்ணன், சேகர், மாரிமுத்துஉட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி