பொங்கல் பண்டிகைக்கு 1000ரூபாயுடன் கரும்பும் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் நன்றி!
முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் குறிப்பிடுகையில்,
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடனும் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வயலில் பாடுபட்டு உழைத்து உருவாகிய நெற்பயிரில் உருவான புத்தரிசியை கொண்டு பொங்கலிட்டு, இதற்கு மிகவும் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி கூறி கொண்டாடும் பொங்கல் பண்டிகை, இவ்வாண்டும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 16 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், அதோடு கூட பச்சரிசியும் சக்கரையும் வழங்கிட உத்தரவிடட்டார்கள்.தற்போது அவற்றுடன் கரும்பும் வழங்க ஆணையிட்டு இருப்பது விவசாய தொழிலாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில் முழு கரும்பு அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக கொடுக்கப்படுவதால் அதனைப் பயிரிடுகின்ற விவசாயிகள் அதில் கவனமுடன் பணியாற்றி உருவாக்குகின்ற விவசாயத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் முதல்வரின் அறிவிப்பால் அல்ல ஊக்குவிப்பால் தொடர்ந்து நன்முறையில் உத்வேகத்துடன் விவசாயம் செய்கின்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.
தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டில் ஒன்றரை லட்சம் விவசாய பெருங்குடி மக்களுக்கு இலவச மின்சார இணைப்பு கொடுத்து உதவியை செய்த முதல்வர் இரண்டே கால் கோடி மக்களின் குடும்பங்களுக்கு இன்று பொங்கல் பண்டிகைக்கு தித்திக்கும் கரும்பினையும் சேர்த்து வழங்கிட உத்தரவிட்டிருப்பது விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் கழக அரசு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது. தமிழக விவசாய தொழிலாளர்கள் சார்பில் மா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்று திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் ஜெகவீரபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.