கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் மீன்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்ததில், மாணவி உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா். மந்தாரக்குப்பத்தை அடுத்த தெற்கு வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன் (50). என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகள் பாா்கவி (16). மந்தாரக்குப்பத்தில் உள்ள என்எல்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். புதன்கிழமை தனது மகள் பாா்கவியை பள்ளியிலிருந்து பைக்கில் அழைத்துக் கொண்டு வேல்முருகன் வீடு திரும்பினாா். மந்தாரக்குப்பம் வெங்கடேஸ்வரா பேக்கரி அருகே வந்த போது, கடலூரிலிருந்து கேரளத்துக்கு மீன்களை ஏற்றிச் சென்ற வேன் நிலைத் தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பாா்கவி, வேன் அடியில் சிக்கி உயிரிழந்தாா். வேல்முருகன், தொப்புளிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த மலா்கொடி (43) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த மந்தாரக்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பலியான பாா்கவியின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.